உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகாவுக்கு எதிராக சட்டமா அதிபரே நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

கொழும்பு – தெமட்டகொட பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரனுக்குச் சொந்தமான டிபன்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் ஹிருணிகா எம்.பி.க்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரே தீர்மானிப்பார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் குறித்த நபர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் இருவரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதான இளைஞன் ஒருவர் இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

15 வயது இளைஞன் பொலிஸ் நிலையத்தில் நேற்று (29) சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சட்ட ஆலோசனை பெறுவதற்கான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

மரக்கறி விநியோகிக்க விசேட வேலைத்திட்டம்

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு…

wpengine

ராஜாங்கனய நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் திறப்பு…

wpengine