கேளிக்கை

ஹீரோவாகும் முகின்

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – பிக்பாஸ் 3-வது சீசனில் வெற்றி பெற்ற முகின் ராவ், ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முகின் ராவ் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பெண் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க உள்ளாராம்.

இவர் ஏற்கனவே நானி, நித்யாமேனன் நடித்த ‘வெப்பம்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் முகினுக்கு ஜோடியாக திவ்யா பாரதி அல்லது சீரியல் நடிகையான சிவானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்கும் பிரபலங்கள்…

wpengine

உலகில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அதிகம் வாழும் நாடுகள் இதுதானுங்க..

wpengine

விஜய்யை அழைக்கும் ஸ்டாலின்

wpengine