உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஹெட்ரிக் சாதனையை சாதித்தார் ஜமைக்காவின் புயல். (VIDEO))

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜமைக்காவின் மின்னல் மனிதன் உசைன் போல்ட் 4*100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இது இவர் ஒலிம்பிக்கில் பெறும் 9வது தங்கமாகும்.

இந்த தொடர் ஓட்டத்தில் இவருடன் Asafa Powell, Yohan Blake மற்றும் Nickel Ashmeade போன்ற வீரர்களும் கலந்து கொண்டனர்.

ரியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும், அடுத்ததாக 200 மீட்டர் ஓட்டத்தில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இதற்கு முன்னதாக பீஜிங் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீற்றர், 200 மீற்றர், 4X100 மீற்றர் தொடர் ஓட்டம்), லண்டன் ஒலிம்பிக்கில் 3 தங்கமும் (100 மீற்றர், 200 மீற்றர், 4X100 மீற்றர் தொடர் ஓட்டம்) வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=uIC61eaowZQ” width=”560″ height=”315″]

Related posts

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

பதில் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபரால் அறிவிப்பு

wpengine

ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியான செய்தி கோட்டாபயவின் கட்டுக்கதை – மங்கள [VIDEO]

wpengine