உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் கொசல்வத்த ரைனா கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதாள உலகக்குழு உறுப்பினர் தினுக்கவின் உதவியாளரான கெசல்வத்த ரைனா கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழாமினால் களனியில் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 3 தொலைபேசிகள், 19 சிம் அட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நிஸ்ஸங்க மற்றும் மேஜர் ஜெனரல் பாலித ஆகியோருக்கு எதிராக, குற்றப்பத்திரம் தாக்கல்

wpengine

முட்டாள்தனத்தைப் பரப்பும் முஸ்லிம்களை நினைத்து வெட்கப்படுகிறேன் – சிங்கள நடிகை..!

wpengine

கட்டார் ரியால் மாற்று விவகாரத்தினை மத்திய வங்கி மறுப்பு..

wpengine