உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய 37 ஆயிரத்திற்கு மேற்பட்டேர் கைது…

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய 37 ஆயிரத்திற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தக் காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 500 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என்றும் 430 கிலோ ஹெரோயினைப் பொலிசார் கைப்பற்றியிருந்தார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் சிக்கிய இரண்டாவது ஆகக்கூடுதலான ஹெரோயின் தொகை நேற்று முன்தினம் பேருவளையில் கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 34.4% இனால் வீழ்ச்சி…

wpengine

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறையில் 33 கையடக்கத் தொலைபேசிகள், 35 சிம் அட்டைகளை கண்டுபிடிப்பு..!

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ICC

wpengine