உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் விற்பனை மன்னன் பூஜிதவுக்கு மரண தண்டனை விதிப்பு

ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

246.14 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தமை, அதனை விற்பனை செய்தமை தொடர்பில் காவற்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட பூஜித ரங்க சம்பத் என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கினார்.

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் ஹெரோயின் போதைப் பொருளை மொறட்டுவ பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த இந்த நபர், பாகிஸ்தான் பிரஜை ஒருவரிடம் ஹெரோயினை பெற்றுக்கொள்ளும் போது கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மஹிந்தானந்தவின் கருத்து கேள்விக்குரியது : நாமல் Twitter பதிவு

wpengine

முஸ்லிம் மாணவர்களுக்கான இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

wpengine

இன்று(21) மற்றும் நாளை(22) டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம்…

wpengine