உள்நாட்டு செய்திகள்

04 மணி நேரத்தில் 2564 பேர் கைது…

இன்று(24) அதிகாலை 02.00 மணி முதல் அதிகாலை 06.00 மணி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது கைது செய்யப்பட்டவர்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 504 பேர் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 720 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களுள் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த 04 பேரும் வேறு பல குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட 741 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 4735 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷேட சுற்றிவளைப்பின் போது ஹெரோய்ன் மற்றும் வேறு விதமான போதைவஸ்துக்களை வைத்திருந்த 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்திருந்தார்.

 

####

Related posts

‘சினோபார்ம்’ புதனன்று வருகிறது

wpengine

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு

wpengine

எதிர்கட்சித் தலைமைப் பதவிக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காண முடியும் – சபாநாயகர்…

wpengine