உள்நாட்டு செய்திகள்

100 தங்க பிஸ்கட்டுக்களுடன் போலாந்து பிரஜை ஒருவர் கைது…

100 தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமான முறையில் கடத்தி வந்த போலாந்து நாட்டுப பிரஜை ஒருவர் இன்று(31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 10 கிலோ கிராம் நிறையுடைய 100 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தங்க பிஸ்கட்டுக்களின் பெறுமதி சுமார் 65 மில்லியன் என விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஷானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

முதல் முறையாக அரசினால் loyalty card நாளை அறிமுகம்

wpengine

சைட்டம் மாணவர்களை கொத்தலாவல’வில் உட்சேர்க்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் 05 கோரிக்கைகள்…

wpengine