Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த தேரர்..!

மச்சவாச்சியில் தேரர் ஒருவர் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத் தேரரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மச்சவாச்சி – வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வாழ்ந்து வரும் 59 வயதுடைய தேரர் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 07 ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தேரர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு

wpengine

விசேட பாராளுமன்ற அமர்வு அடுத்த வாரம்

Azeem Kilabdeen

கொட்டாஞ்சேனையில் வாகனப் போக்குவரத்து மட்டு…

wpengine