ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன்

13 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரியின் 20 வயது மகன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான, பாகிஸ்தான் நாட்டின் முக்கிய பதவியில் இருப்பவர், மொஹமர் முரீட் ரஹீமூன். இவரது 20 வயது மகன் மெஹமூட் உர் ரேமான் ரஹிமூன், ஸ்கார்ஸ்டேல் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ‘விஸ்பர்’ எனப்படும், சமூக வலைத்தளத்தின் மூலமாக, ப்ரோன்க்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன், ரகுமானுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பிறகு அவ்வப்போது இருவரும் சந்தித்து பேச தொடங்கினர். டிசம்பர் 1ஆம் திகதி, இவ்விருவரும் மூன்றாவது முறையாக சந்தித்தனர்.

இந்த சந்திப்பு ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. அப்போது, இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர்.

அதேநேரத்தில், சிறுமியை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்த அவரது தந்தை சிறுமியின் கையடக்கத்தொலைபேசிக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

பின்னர், சந்தேகமடைந்த சிறுமியின் தந்தை, சிறுமி வீட்டுக்கு வந்த பிறகு துருவி துருவி கேட்டுள்ளார்.

அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த முறைப்பாட்டில் பெயரில் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பல கட்ட விசாரணைகளின் பொருட்டே பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர். சிறுமியை துஷ்பிரயோகித்தமை உள்ளிட்ட பல வழக்குகளின் மீது அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய அதிபர் கைது!

wpengine

மைத்திரி – மஹிந்த கூட்டணி தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானம்…

wpengine

கொரோனா கண்டறிய இலங்கையில் Self Shield App

wpengine