உள்நாட்டு செய்திகள்

13 வௌிநாட்டவர்கள் கைது…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் , 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ கொத்தலாவல பகுதியில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஈராக் நாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கல்கிஸ்ஸ பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 6 நைஜீரியா பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதெவேளை வெலிகட புத்கமுவ வீதியிலும் 4 நைஜீரியாவை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரத்மலானையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், 20 வயதாக இந்திய பிரஜையொவருவர் கைது செய்யப்பட்டுளளார்.

தெஹிவளையில் தாய்லாந்தை சேர்ந்த 38 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

தேர்தலுக்கான புதிய திகதி, அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

wpengine

முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கு பதவி உயர்வு

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine