உலக செய்திகள்

1800 ISIS தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்..

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சிறுபகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு வசிக்கும் பொதுமக்களை சித்ரவதைப்படுத்தியும், குடும்பப் பெண்களை பாலியல் அடிமைகளாக சிறைபிடித்தும் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த சில முக்கிய நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளது. இதேபோல் ஈராக்கிலும் அவர்களிடம் பறிகொடுத்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

அவ்வகையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றான பலுஜா நகரின்மீது தரைப்படை மற்றும் விமானப்படைகளின் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளை விரட்டியடிக்க ஈராக் அரசு தீர்மானித்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்காதிருக்கும் வகையில் பலுஜா நகரில் வாழ்ந்துவரும் மக்களை தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறும் வகையில் தயாராக இருக்குமாறு ஈராக் அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் சண்டையிட்டபடி முன்னேறிச் சென்ற அரசுப் படைகள் பலுஜா நகரின் மையப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த உள்ளூர் நகராட்சி கட்டிடத்தை கடந்த 17-ம் திகதி கைப்பற்றின.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈராக் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் வஹாப் அல் சய்தி, கோலன் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரான பலுஜா தீவிரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்நகரை மீட்பதற்காக கடந்த ஒருவார காலமாக நடைபெற்ற போரில் 1800 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளார்.

Related posts

பசிபிக் கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

wpengine

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine