உள்நாட்டு செய்திகள்

2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,691 பேர் எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வயலை அண்டிய பகுதிகளிலேயே அதிகமானோர், எலிக் காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இரத்தினபுரி மாவட்டத்தில் 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிய மருத்துப் பொருட்களை வழங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை…

wpengine

தாஜூடின் கொலை – அனுர, சுமித்திற்கு தொடக்கம் முதல் தொடர்பு உண்டா என விசாரணைகள் ஆரம்பம்

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine