விளையாட்டு

2 புள்ளிகளைப் பெற்று 4ம் இடத்தில் பாகிஸ்தான் அணி

ஆசிய கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டித் தொடரின் ஆறாவது போட்டி நேற்று நடைபெற்றிருந்தது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் என்பன நேற்றைய போட்டியில் மோதின.

இதில் முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு ராச்சியம், 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.

பாகிஸ்தானுக்காக 63 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்த சொஹைப் மாலிக் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் இரண்டு புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.

இந்தியா நான்கு புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும், பங்களாதேஸ் இரண்டாம் இடத்திலும், இலங்கை மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

Related posts

வெளிப்படையாகவின்றி உபாய ரீதியாக மஹேல உதவலாம் – மேதியுஸ்

wpengine

ஐந்தாவது சதத்தை பெற்ற குசல் – பங்களாதேஷ் அணிக்கு 315 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்

wpengine

மிஸ்பா உல் ஹக் இவ்வருட இறுதியில் ஓய்வு பெறத் தீர்மானம்

wpengine