விசேட செய்தி

20க்கு அமைச்சரவை அனுமதி

. 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் அமைச்சரவையில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை  நேற்று மாலை கூடியது.
அதன்போது ஜனாதிபதி 20ம் திருத்தம் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளார் இதன்போது இந்த திருத்தம் மூலம் சிறு கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யோசனைக்கு அனுமதி அளிக்குமாறும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுவாதிக் கொலையின் சந்தேகநபர் ராம்குமார் தற்கொலை..

wpengine

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி நியமனம்…

wpengine