உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2017இற்கான வரவு செலவுத்திட்டத்திற்காக யோசனைகளை கோருகிறது நிதியமைச்சு..

2017இற்கான வரவு செலவுத்திட்டத்திற்காக ஒக்டோர் முதலாம் திகதி வரை யோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், சிவில் அமைப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடம் இருந்து குறித்த யோசனைகளை பெற்றுக்கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக முதலீட்டு திணைக்களம், நிதியமைச்சு கொழும்பு 1 என்ற முகவரிக்கோ அல்லது budjet2017@mo.gov.lk என்ற மின்னஞ்சலுக்கோ யோசனைகளை அனுப்பி வைக்க முடியும்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட யோசனை நவம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்

wpengine

அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

wpengine

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

Azeem Kilabdeen