உள்நாட்டு செய்திகள்

2017இல் இருந்து பொலித்தீன் பாவனைக்கு முற்றாகத் தடை…

2017 ஆம் ஆண்டிலிருந்து பொலித்தின்,பிளாஸ்ரிக், ரெஜிபோம், பாவனைகளை  தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே. எச் முதுகுடா ஆராச்சி தெரவித்துள்ளார்.

இவற்றின் தடை தொடர்பிலான சிபாரிசுகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி முன்வைத்துள்ள கருத்துகள் , யோசனைகளின் மீது அடுத்தாண்டு முதல் சிபாரிசுகள் அமுலாக்கப்படும்.

புதிய உத்தரவுகள் அமுலாகும் முன்னர் உற்பத்தியாளர்களும். பொதுமக்களும் புதிய ஏற்பாட்டுக்கு உகந்த வகையில் பழகிக் கொள்ள வேண்டும் இதற்கு 6 – 7 மாதங்கள் சலுகை காலமாக வழங்கப்படும்.

தற்போது 20 மைக்ரோன்களுக்கு குறைந்த பொலித்தின் இறக்குமதி செய்வதை நாம் முற்றாக நிறுத்தியுள்ளதுடன், விற்பனையாளர்களை முற்றுகையிட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Related posts

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

wpengine

அனுமதிப்பத்திரமற்ற மாகாண பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு

wpengine

இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine