வணிகம்

2017 ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம்…

2017 ஆம் ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டியிருப்பதாக நிலைபெறா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இங்கு விஜயம் செய்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 397,122 எனவும், இவர்களுள் 207,927 பேர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளாவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உடவளவ தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் 358.44 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன், 236867 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளனர்.

ஹோட்டன் தென்ன தேசிய பூங்காவின் மூலம் 361.09 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதுடன் இங்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 345,480 பேர் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

CITES மாநாட்டின் 18வது கூட்டத்தொடர் இலங்கையில்…

wpengine

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கை உயர்வு

wpengine

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு…

wpengine