உள்நாட்டு செய்திகள்

2018 உயர்தர விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை திணைக்களத்தினால் சிவப்பு அறிவித்தல்…

2018 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை பெப்ரவரி 23ம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் 23ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை குறித்த திணைக்களத்திற்கு கிடைக்கக் கூடியவாறு நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் கோரப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெரும் விண்ணப்பங்கள் எக்காரணங்களுக்காகவும் ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

 

Related posts

தனுஷ்க குணதிலக்கவின் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவுஸ்திரேலியா பொலிஸார் ‘நியாயமற்ற முறையில்’ நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பு..!

wpengine

மசகு எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் வருகிறது

wpengine

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

wpengine