உள்நாட்டு செய்திகள்

2018 – வரவு செலவுத் திட்டத்தின் 02ம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று..

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று(16) மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு மீண்டும் கூடவுள்ளது. இன்றும் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதம் தொடர்ந்து ஆறாவது நாளாக இடம்பெறவுள்ளது.

நாளை(17) அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் இடம்பெறுவதுடன் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதம் தொடங்குகிறது.

குறித்த இந்த விவாதம் டிசெம்பர் 9ஆம் திகதி வரை காலை 9.30 தொடக்கம் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளும் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் நாளை(17) ஜனாதிபதி, பிரதமர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், அமைச்சரவை அலுவலகங்கள், அரச ஆணைக்குழுக்கள், பாராளுமன்றம், ஆளும் கட்சி அமைப்பாளர், எதிர்க்கட்சி அலுவலகம் உள்ளிட்ட 27 துறைகள் சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

##rizmira

Related posts

மத்தள விமான நிலையத்தின் தேவையினை அரசு புரிந்து கொள்ளும் – நாமல்

wpengine

அரச சேவைப் பயிற்சியின் நிமித்தம் சேவையில் இணைக்கப்படவுள்ள 4,053 பட்டதாரிகள்…

wpengine

கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு…

wpengine