உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

23 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவியது

ஆசியக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

இதில், நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஷப்பிர் ரகுமான் (Sabbir Rahman), 80 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரது இந்த அபார ஆட்டத்தின் உதவியுடன், பங்களாதேஷ், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 147 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 148 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக இலங்கை துடுப்பெடுத்தாடியது.

எனினும் அந்த அணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வரிசையாக வெளியேறினர். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 37 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இறுதி ஓவரில் 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 32 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி இக்கட்டான நிலையை எதிர்கொண்டது.

எனினும் அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து, 124 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது.

இதற்கமைய பங்களாதேஷ் அணி 23 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியது.

Related posts

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது…

wpengine

ஹரீஸ் அவர்களின் D-100 திட்டத்தினூடாக கல்முனை ஸ்ரீ சுபத்ராராம மகா விகாரையில் அன்னதான மண்டபம் திறப்பு!

Azeem Kilabdeen

தாமரை கோபுரத்திற்காக இலங்கை பெற்ற கடனை தீர்க்க, நாளாந்தம் 41,000 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும்..!

wpengine