ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

25 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டம் செய்த நபர்

28 வயதான கொடி லீ மில்லர் எனும் இந்த இளைஞர் வொஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரிலுள்ள 80 அடி உயரமான மரமொன்றில்  25 மணித்தியாலங்களாக ஏறியிருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு எதிராக அந்நாட்டு அதிகாரிகள் வழக்குத் தொடுத்துள்ளனர்.
விசாரணை யொன்றின் போது பொலிஸ் அதிகாரியிடம் பொய்யான பெயரைக் கொடுத்த குற்றத்துக்காக அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதற்கு திராகவே அவர் பல உயரமான கட்டடங்களின் மத்தியிலுள்ள மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மரத்திலிருந்து இறங்குமாறு அவரை பொலிஸார் அறிவுறுத்திய போதிலும் அதை அவர் செவிமடுக்கவில்லை. அருகிலுள்ள கட்டடமொன்றின் 6 ஆவது மாடியிலிருந்த வாறும் தீயணைப்புத் துறையினரின் கிரேன் ஒன்றிலிருந்தவாறும் பொலிஸ் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொலைக்காட்சிகளில் இந் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. சுமார் 25 மணித்தியாலங்களின் பின்னரே மரத்திலிருந்து மில்லர் இறங்கினார்.

 

Related posts

அரசியல்வாதிகளை கெளரவப்படுத்துமாறு கல்வி வலயப் பணிப்பாளரிடமிருந்து அதிபர்களுக்கு கடிதம்…

wpengine

43 ஆக அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும்..?

wpengine

தமிழர் மீது அனுதாபம்; விடுதலைப்புலிகள் தொடர்பில் அயூப்கானின் கருத்து

wpengine