உள்நாட்டு செய்திகள்

28 கொள்கலன்கள் மீளவும் உக்ரைனுக்கு அனுப்ப நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் நேற்று ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நேற்றையதினம் குறித்த கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவற்றில் விவசாய கழிவுகள் இருந்தமை கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கொள்கலன்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மீளவும் உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பியல் நிஷாந்தவிடம் 05 மணிநேர விசாரணை…

wpengine

தனுஸ்கவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தசுன் சானக்க..!

wpengine

ஜனாதிபதி மைத்திரிக்கு புட்டின் கலந்துரையாடல் மார்ச்சில்..

wpengine