உள்நாட்டு செய்திகள்

290 இலத்திரனியல் டெட்டனேட்டர்களுடன் நால்வர் கைது

(FASTNEWS|COLOMBO) – பிலியந்தல, ஹெதிகம பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 290 இலத்திரனியல் டெட்டனேட்டர்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வீட்டின் உரிமையாளர், அவருடைய மகன்கள் இருவர் மற்றும் டெட்டனேட்டர் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கடுவலை – பியகம வீதிக்கு பூட்டு…

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இன்று இரவு தீர்மானம் எட்டப்படும் எனும் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு… (update)

wpengine

டேரன் லீமன் தனது பதவியினை இராஜினாமா செய்தார்..

wpengine