Top Story 3உள்நாட்டு செய்திகள்

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இதன்படி, உள்ளூர் சம்பா அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 189 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் உள்ளூர் நாட்டரிசி விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன் கோதுமை மா விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகுமென லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து

Azeem Kilabdeen

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க யோசனை முன்வைப்பு..

wpengine

பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம்

wpengine