உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

6-வது வீரராக களம் இறங்கி 9 சதங்கள் விளாசிய பாக். வீரர் ஆசாத் சாதனை..

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் 6-வது நபராக களம் இறங்கி 9 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஆசாத் ஷபிக் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்.

4-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் குவித்ததுள்ளது. பாகிஸ்தான் அணியின் 6-வது வீரராக களம் இறங்கிய ஆசாத் ஷபிக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

இந்த சதம் மூலம் 6-வது நபராக களம் இறங்கி அதிக சதங்கள் (9) அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் கேரி சோபர்ஸ் 8 சதங்கள் அடித்ததே அதிகபட்ச சதமாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சந்தர்பால், டோனி கிரேக், ரிக்கி பாண்டிங், திலகரத்னே ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்துள்ளனர்.

6-வது வீரராக களம் இறங்கி 9 சதங்கள் அடித்து பாக். வீரர் ஆசாத் ஷபிக் சாதனை

Related posts

பாராளுமன்றில் சுயாதீன குழுவாக இயங்குவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணியின் தீர்மானம் இன்று…

wpengine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜாக் காலிஸ்

wpengine

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து துப்பாக்கிப் பிரயோகம் – விசாரணை அறிக்கை நாளை..

wpengine