உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘தான் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளேன்’ ஜனாதிபதி, பொதுநலவாய செயலாளர் நாயகத்திடம் தெரிவிப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்ட விதத்திலேயே செயற்பட்டுள்ளதாகவும், நான் தொடர்ந்தும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றுவேன் எனவும், பொதுநலவாய செயலாளர் நாயகம் பரொனொஸ் பட்றீசியா ஸ்கொட்லாண்டிடம் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகத்துடனான தொலைபேசி உரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவை பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளை பின்பற்றுமாறு நான் தெளிவாக கேட்டுக் கொண்டேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இலத்திரனியல் முறையை பயன்படுத்தி வாக்கெடுப்பை நடத்துமாறும் அல்லது பெயர் மூல வாக்கெடுப்பை நடத்துமாறும் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இலங்கை ஜனநாயகத்தை பின்பற்றுவதை பொதுநலவாயம் முக்கியமான விடயமாக கருதுகின்றது என தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் வாகன விபத்தில்.. (PHOTOS)

wpengine

கலகெடிஹேன பிரதேசத்தில் தீ விபத்து..

wpengine