உள்நாட்டு செய்திகள்

நாளை(05) பௌத்த கொடியை ஏற்றுமாறு கோரிக்கை…

பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகம் நாளை(05) தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படவுள்ளதால், நாளை நாட்டிலுள்ள சகல பௌத்த நிலையங்களிலும் அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை ஏற்றி கௌரவத்தை செலுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன கேட்டுக் கொண்டுள்ளார்.

2300 வருடங்களாக பௌத்த பிக்குகள் உள்ளடங்களாக இலங்கையின் பௌத்த மக்களால் போற்றி பாதுகாக்கப்படும் பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கும் தேசிய வைபவம் நாளை(05) மாத்தளை அலுவிஹாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா : மேலும் 204 பேர் அடையாளம்

wpengine

அதிவேக கட்டணங்களில் மாற்றம்

News Editor

2000ம் ஆண்டு மைத்திரி படுகொலை முயற்சி வழக்கின் தீர்ப்பு இன்று (22)

wpengine