உள்நாட்டு செய்திகள்

65வது வருட நிறைவையொட்டி இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலை பொதுமக்கள் காட்சிக்கு

இலங்கை விமானப் படையின் 65வது வருட நிறைவு தினத்தையொட்டி, இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலையை பொதுமக்கள் இன்று புதன்கிழமை இலவசமாக பார்வையிட முடியும் என விமானப்படைப் பிரிவு அறிவித்துள்ளது.

விமானப்படையின் 65வது நிறைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இரத்த தானம் வழங்கல், இலவச சுகாதார சேவைகள், கல்விச் சேவைகள், கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் என்பன இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ககன் புலத்சிங்களவின் வழிகாட்டலின் பேரில் 65 வருட நிறைவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அடுத்த இரு வருடங்களில் தொழில் வழங்குவதற்கு வழியில்லை

wpengine

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

wpengine

யுகதனவி : விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

wpengine