உள்நாட்டு செய்திகள்

66 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு…

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 66 இந்திய மீனவர்களின் விளக்கமறியல், ஜனவரி 9ம் திகதி வரை நீடித்து நேற்று(26) ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஆர். சபேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 3 மாத காலப்பகுதியில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 144 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் குறிப்பிட்ட சில மீனவர்களின் வழக்குகள் வெவ்வேறு தினங்களில் ஊர்காவற்துறை மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி நேற்று(26) 66 இந்திய மீனவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது இந்த மீனவர்களை விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து உரிய அறிவுறுத்தல் வராத காரணத்தால் மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்க அமைச்சரவை அனுமதி…

wpengine

முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவிற்கு கொழும்பு விசேட உயர் நீதிமன்றம் அழைப்பாணை

wpengine

ஒலிம்பிக் இற்காக 46 அதிகாரிகள் பிரேசில் சென்றது ஏன்.. – அறிக்கை கோருகிறார் பிரதமர்

wpengine