உள்நாட்டு செய்திகள்

67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இதன் போது 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும் எஞ்சிய 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.  இதேவேளை, நுகர்வோர் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என்று கூறிக்கொண்டு சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் சிலர் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அம்பாறை பரகஹகலே பிரதேசத்தில் இருந்து தகவல் பதிவாகியுள்ளது.

Related posts

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோக நிறுத்தமானது தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

பெண் ஒருவரின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை

wpengine

ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது..!

wpengine