ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது!

யாழ். தபால் திணைக்களத்திற்கு முன்பாக 8 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த இருவரும் விற்பனை செய்வதற்காக குறித்த பகுதியில் நின்று தடுமாறிக்கொண்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். பிரதேச பொலிஸ் அத்தியட்சர்கரின் கீழான புலனாய்வு பிரிவினர் கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

28 மற்றும் 25 வயதுடைய இருவ இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹெல்மெட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை…

wpengine

வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கைக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பில் பாராளுமன்ற வளாகம்…

wpengine

மாகந்துரே மதூஷ் இனது சுகதுக்கங்களை அறிய புத்தாண்டு விடுமுறைக்கு அரசியல்வாதிகள் துபாயில்…

wpengine