உள்நாட்டு செய்திகள்

928 கிலோகிராம் கொக்கேய்ன் இன்று அழிப்பு…

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினரால் கைப்பற்றப்ப்டடுள்ள 928 கிலோகிராம் கொக்கேய்ன் இன்று(15) அழிக்கப்படுகின்றது.

கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் கொக்கேய்ன் தொகையை நீரில் கரைத்து முற்றாக அழிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்து்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அப்பகுதிக்கு வருகை தந்துள்ளார் என தெரிவிக்கபப்டுகிறது.

குறித்த கொக்கேய்ன் தொகை 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி கொழும்பிற்கு வருகை தந்த கப்பலொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கொக்கேய்னின் பெறுமதி ஆயிரத்து 620 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டனர்.

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவிற்கு…

wpengine

உயர்மட்டங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டாமல் உள்ளூர்க் கூட்டங்களுக்கு வந்து வீண் தர்க்கங்களில் ஈடுபடுவது உகந்ததா? மாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கத்திடம் அமைச்சர் ரிஷாட் இடித்துரைப்பு!!

wpengine

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

wpengine