ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கோழி இறைச்சியின் விலையில் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கக் கூடும் என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

‘ …சந்தையில் உருவாக்கப்பட்டிருக்கும் வர்த்தக மாபியா காரணமாக, பண்டிகை காலங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 ரூபாயை தாண்டக்கூடும். விலங்கு தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, உற்பத்தியாளர்கள் சாதாரண விலையில் இறைச்சி வழங்குவதிலிருந்து விலகுகிறார்கள் எனவும் சந்தையில் கோழி பற்றாக்குறையை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர்..

இந்நிலையில், வரும் பண்டிகை காலங்களில், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கு இறைச்சிக்கான பற்றாக்குறையை பயன்படுத்திக் கொள்வார்கள்..” என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சந்தை விலை 550-600 ரூபாய் வரையிலும், ஒரு முட்டையின் மொத்த விலை 12 ரூபாயாகவும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘தாயகத்திற்கு ஒரு புதிய காலை’ மஹிந்தவின் முகநூல் பதிவுக்கு குவிகிறது ஆதரவு…

wpengine

இன்றிலிருந்து ஊழியர் சேமலாப நிதிக் கணக்கிலிருந்து நூற்றுக்கு 30 வீதக் கொடுப்பனவு

wpengine

கருவுக்கு’ ‘Pride of Asia’கௌரவ விருது…

wpengine