உள்நாட்டு செய்திகள்

ஜெனீவா யோசனை குறித்து கருத்து வெளியிட ஊடகங்களுக்கு தடை – விமல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை குறித்து பேசுவதற்கு ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான அவர், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஜெனீவா யோசனை குறித்து கதைக்க ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஊடகங்களுக்கு தணிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் செய்வது சரியான ஒன்றாக இருக்குமாயின் எதிரான கருத்துக்களுக்கு தடையேற்படுத்தும் தேவை இருக்காது.

அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டால், அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

(riz)

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு Pfizer தடுப்பூசி

wpengine

பிரதமர் பின்லாந்து நோக்கி விஜயம்..

wpengine

சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

wpengine