உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “ஜிஹாத்” என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பு இளைஞர்களுக்கு அழைப்பு

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு “புனிதப்போர்” நடத்துவதற்காக இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவும் தங்களது முதல் தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது நடத்தி சாதனை படைத்தது.

தற்போது, தங்களது அமைப்பிற்கு வலுத்துவரும் எதிர்ப்பை புரிந்துகொண்ட ஐ.எஸ் அமைப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக ‘ஜிகாத்’ (புனிதப்போர்) நடத்த ஒன்றிணையுமாறு இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.எஸ். செய்தித் தொடர்பாளர் அபு முகமது அல் அதானி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் இணைந்து வாருங்கள்.

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக நாம் ‘ஜிகாத்’ நடத்த வேண்டும். ஏனெனில் இது இறைநம்பிக்கை உடையவர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையேயான போர். இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் வன்முறைக்கு எதிரான போர்” எனப் பேசியுள்ளார்.

இத்தகவலை சீன செய்தி நிறுவனமான சினுவா உறுதி செய்துள்ளது.

 

Related posts

முச்சக்கரவண்டி சாரதி அனுமதி பத்திரம் பெற முன்னர் செயலமர்வு…

wpengine

தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒத்திவைப்பு..

wpengine

திரையிலிருந்து நீக்கப்பட்ட பசில், கோட்டா..!

wpengine