உள்நாட்டு செய்திகள்

மேலும் 1,028 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 25,886 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் அனுமதியின்றி கொழும்பிற்கு வந்த 976 வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

நீண்டகால அகதிகளின் பிரச்சினை தீர, மீண்டுமொரு அமைச்சரவை பத்திரம். இரு வார காலத்தினுள் தரவுகளை கோருகிறார் அமைச்சர் றிஷாட்.

wpengine

ஆஸி பிரதமரிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த ஜனாதிபதி

wpengine