உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரு வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் இங்கிலாந்தில் பாதுகாப்பற்ற விதத்தில் உலாவும் காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியதை தொடர்ந்து, இருவரையும் நாட்டுக்கு திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இங்கிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள மேற்படி இருவரும் உயிர்குமிழி முறைமையை மீறியமைக்காக இவ்வாறு திருப்பியழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் அணி முகாமையாளரிடம் அறிக்கையொன்றும் கோரப்பட்டுள்ள அதேவேளை, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

திலுமுக்கு மற்றுமொரு அமைச்சு

wpengine

சீனாவில் உள்ள 30 மாணவர்களை வரவழைப்பதில் சிக்கல்

wpengine

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine