Top Story 3உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல் இருந்து 18 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

17 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாகவே கருதப்படுகின்றனர்.

அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளது.

எனவே இந்த காரணிகளை கருத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 18 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

செஹான் மதுசங்க கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம்

wpengine

சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவு…

wpengine

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு…

wpengine