உள்நாட்டு செய்திகள்

மேலும் 626 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட் -19 தொற்றுபரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59,621 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்று(26) மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதியில், 307 வாகனங்களில் பயணித்த 515 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், மேல் மாகாணத்துக்கு பிரவேசித்த 302 வாகனங்களில் பயணித்த 580 பேர் சோதனைச்சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு கொண்டு வரப்படும் அனைத்துப் பொதிகளும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை…

wpengine

பரீட்சைகள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

wpengine

பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் மற்றும் வர்த்தக அமைச்சரிடையே சந்திப்பு

wpengine