Top Story 3உள்நாட்டு செய்திகள்

PCR – RAPID ANTIGEN பரிசோதனைகள் மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பிசிஆர் மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, நாட்டில் கொவிட் பரவலின் தன்மையை மதிப்பிட முடியாது என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொவிட் பரிசோதனைகளை மட்டுப்படுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, நாளாந்தம் வெளியிடப்படும் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் காணப்படலாம் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், நாளாந்த அறிக்கைக்கு அமைய, கொவிட் பரவலின் தன்மையை மதிப்பிட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்…

wpengine

கோத்தபாய முகாமிற்கு இராணுவம் நிரந்தர வேலி

wpengine

2024 இல் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் அரசு….?

News Editor