உள்நாட்டு செய்திகள்

இன்றும் இடியுடன் கூடிய மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Related posts

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்

wpengine

நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்…

wpengine

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் இன்று இரவு விழிப்பில்..

wpengine