Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாடு முடக்கப்படாது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய வைரஸ் பரவிக்கொண்டு வருகின்ற நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமா? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, “நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய விடயங்களை கவனத்தில் கொண்டு, நாட்டை முடக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“வைரஸ் தொற்றுவதை தவிர்ப்பதற்காக, சுகாதார வழிகாட்டல்கள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள்

wpengine

சமூக ஐக்கியத்துக்கான சந்தர்ப்பங்களை தவறவிடமால் பயன்படுத்தும் சிறந்த தினம் “ஈதுல் பித்ர்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

News Editor

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும்

wpengine