உள்நாட்டு செய்திகள்

தீ விபத்தினால் சிறுமி பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | வெலிகம) – மாத்தறை – வெலிகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (30) இரவு ஏற்பட்ட இந்த தீவிபத்தின் போது, அறையின் மேற்கூரை சரிந்து, அறைக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி மீது விழுந்துள்ளது.

இந்த தீ விபத்தின் போது அருகில் உள்ள அறையில் இருந்து சிறுமியின் பாட்டி மற்றும் 13 வயது சகோதரி ஆகியோர் அங்கிருந்து வெளியில் சென்றதால் உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மீன் ஏற்றுமதித் தடை உத்தியோகபூர்வமாய் நீங்க இன்னும் இருவாரங்கள் செல்லும் – மீன்பிடி அமைச்சு

wpengine

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1,256 பேர் கைது

wpengine

முகம் மற்றும் காதுகளை முழுமையாக மூடும் ஆடைத் தடை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் திருத்தல்

wpengine