உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சொய்சா கொலை தொடர்பில் மேலும் 8பேர் விளக்கமறியலில்

அனுராதபுரத்திலுள்ள இரவு விடுதி உரிமையாளரான வசந்த சொய்சா கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் எட்டுப் பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முதலில் எட்டுப் பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு அவர்களில் அறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள இருவரையும் 24 மணித்தியாலங்கள் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை இந்த சம்பவம் குறித்து மேலும் அறுவர் கைதான நிலையில் சந்தேகநபர்கள் எட்டுப் பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்த வழக்கில் மொத்தமாக 14 பேர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

wpengine

அரச அச்சு நடவடிக்கைகள் : அச்சக திணைக்களத்தில்

wpengine

ஜனாதிபதியிடமிருந்து, ஜகத் ஜயசூரியவுக்கு தொலைபேசி அழைப்பு..

wpengine