உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் நெருக்கடிக்கு காரணம் தவறான முகாமைத்துவமே!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையின் நெருக்கடிக்கு தவறான முகாமைத்துவமே காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

இந்தியாவின் என்.டி.ரீ.விக்கு அளித்த செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஒரு காலத்தில் சுபீட்சமாகத் திகழ்ந்த அந்நாட்டில் நடந்தவற்றை படங்களில் பார்க்கும்போது எனது இதயம் உடைகிறது. இது தவறான முகாமைத்துவத்தின் ஒரு விளைவு. எனவே செய்யப்பட வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் சிறந்த நுண்ணளவுப்பொருளாதார அடிப்படையில் நாட்டை மீண்டு;ம் பழைய நிலைக்கு கொண்டுவருவதாகும்” என அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பு செயற்பாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் வலுவாக உதவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நெருக்கடியான தருணத்தில் அதற்கு உதவுதற்காக இந்தியாவுக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நன்றியும் தெரிவித்துள்ளார்.

Related posts

பேருந்துகளில் பயணிப்போருக்கான அறிவித்தல்

wpengine

அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை – கூட்டுத்தாபனத்தின் காணியை விற்றுவிட தீர்மானம்..!

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது

wpengine