உள்நாட்டு செய்திகள்

ஸஹ்ரானின் மனைவி ஹாதியாவிடம் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின், மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலம் இன்று ( 27) அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே, இவ்வாறு அவை கையளிக்கப்பட்டன.

இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த தவணையின்போது ஸஹ்ரானின் மனைவி சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, பிரதிவாதிக்கு எதிரான சான்றாக முன்வைக்கபப்டும் அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு அவசியம் என நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கபப்டல் வேண்டும் எனவும், அப்போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய, பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இன்றைய வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால், பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

மேலும் 10 பேருக்கு கொரோனா

wpengine

அரசியல் என்பது சிறந்த களம்

News Editor

யால தேசிய வனத்திற்கு ஒரு மாதம் பூட்டு

wpengine