உள்நாட்டு செய்திகள்

ஆயிஷா மரணம் தொடர்பாக கீரை தோட்ட தொழிலாளி கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கீரை தோட்ட தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் இருந்து சேறு படிந்திருந்த நிலையில் சாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்தோடு, அந்த நபரின் உடலில் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த கீரை தோட்டத்தை அண்மித்த காணியொன்றில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்தே, உயிரிழந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இதற்கு முன்னர் தாயும் மகளும் தங்கியிருந்த வீட்டிற்கு இரவில் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் நேற்று முன்தினம் (28) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில் அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சிறுமியின் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர் நியமனம்..

wpengine

இருப்பு, ஒற்றுமை பற்றி பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் இன்று 2வது நாளாகவும் தொடர்கிறது…

wpengine