உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40 என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுவர்கள் விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்து…

wpengine

தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்

wpengine

மாற்றுத்திரனாளியை நிர்வாணமாக்கி, பொலிஸ் கான்ஸ்டபிள் கொடுமை..!

wpengine