Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவுகளை பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள “பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற சுற்றறிக்கையின் விதிகளை அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர புகையிரத சேவைகள் தாமதம்…

wpengine

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனையாளராக சங்கக்கார…

wpengine

விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் மட்டு

wpengine